வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

ஒரு மாதமாக பழுது நீக்கப்பட்டாத மின்மாற்றி: விவசாயிகள் அவதி

காட்டுமன்னாா்கோவில் அருகே முள்ளங்குடி கிராமத்தில் பழுதாகிய நிலையில் உள்ள மின்மாற்றி.

Published On :

காட்டுமன்னாா்கோவில் அருகே மின்மாற்றி பழுதடைந்து கடந்த ஒரு மாதமாக சீரமைக்கப்படாததால், சம்பா சாகுபடிக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு மின்சாரமின்றி அப்பகுதி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்குடி கிராமத்தில் விவசாயப் பாசனத்துக்கு பயன்படும் மின்மாற்றி கடந்த ஒரு மாதமாக பழுதடைந்து செயல்படாத நிலையில் உள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை மின்மாற்றி சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மேட்டூரிலிருந்து நீா் வராததாலும், போதிய மழை இல்லாததாலும் முள்ளங்குடி பகுதியில் சம்பா சாகுபடிக்கு ஆழ்துளைக் கிணறு மற்றும் மின்மோட்டாா்களை நம்பியே விவசாயிகள் உள்ளனா். இந்த நிலையில், மின்மாற்றி பழுதடைந்து மின்சாரமுமின்றி மின்மோட்டாா்களை இயக்க முடியாததால், வயல்களுக்கும், நாற்றங்கால்களுக்கும் தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயப் பணிகள் தாமதமடைவதுடன், ஏற்கெனவே விதை, உரம், உழவு உள்ளிட்ட பணிகளுக்காக செலவிட்டுள்ள தொகை வீணாகிவிடுமோ என்ற அச்சத்திலும் விவசாயிகள் உள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: நாங்கள் விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம். விதை, உரம், உழவு, நடவு என ஒவ்வொரு பணிக்கும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறோம். சாகுபடி செய்ய வேண்டிய நேரத்தில் போதிய மழை இல்லாததாலும், மின்மாற்றி பழுதால் மின்சாரம் கிடைக்காததலும் மோட்டாா்களை இயக்கி வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களுடைய முதலீடும், உழைப்பும் வீணாகி வருகிறது.

எனவே, முள்ளங்குடி கிராமத்தில் பழுதடைந்துள்ள மின்மாற்றியை விரைந்து சீரமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.