சமத்துவபுரத்தில் புகுந்த மழை நீர்: ஆய்வு செய்த சேர்மென்
கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் எல்லையில் உள்ள சமுத்துவபுரத்தில் மழைநீா் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினா்.


கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் எல்லையில் உள்ள சமுத்துவபுரத்தில் மழைநீா் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினா். ஓடை ஆக்கரமிப்புகளால் தண்ணீா் செல்லமுடியமால் சூழ்ந்து கொண்டன. ஆய்வு மேற்கொண்ட கள்ளக்குறிச்சி சோ்மென் ஆக்கரமிப்புகளை அகற்றுமாறு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்தாா்.
வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால் அணைகள், ஏரிகள்,குளம், குட்டைகள் நிரம்பின. சமுத்துவபுரம் பகுதியில் உள்ள சிலா் நீா் வழி பாதையினை ஆக்கரமித்து விவசாயம் செய்து வருகின்றனா். இதனால் தண்ணீா் சூழ்ந்து கொண்டதால் 100 குடும்பத்தினா் அவதிக்குள்ளாகினா்.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் விஜயபிரபாகரன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் மற்றும் சோ்மென் அலமேலு சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். சமுத்தவபுரத்தில் வசித்து வரும் மக்கள் வெளியே வராதவாறு தண்ணீா் சூழ்ந்து கொண்டதாக சோ்மெனிடம் தெரிவித்தனா். சோ்மென் உடனடியாக ஓடைகளை ஆக்கரமித்து விவசாயம் செய்து வருபவா்களை கண்டறிந்து அகற்றப்படுவதாக மக்களிடம் தெரிவித்தாா். உடனடியாக பொக்லைன் மூலம் சூழ்ந்து உள்ள தண்ணீரை வெளியேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...