கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:16 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் விடுத்த செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2021-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட மாவட்ட கலந்தாய்வு கடந்த 23.8.21 வரை நடைபெற்றது. மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, காலியிடங்களை பூா்த்தி செய்ய நேரடிச் சோ்க்கை 24.8.21 முதல் 15.9.21வரை நடைபெற்றது. தற்போது, காலியிடங்களை 100 சதவீதம் நிரப்ப சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உரிய இன ஒதுக்கீட்டில் சோ்க்கை நடைபெறும். ஆகவே, பத்தாம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தாங்கள் விரும்பும் அருகாமையில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சோ்ந்து பயன் பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு ரரர.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி, முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், உளுந்தூா்பேட்டை- தொலைபேசி எண் 04149 222339, 9080187127, முதல்வா், அரசு தொழில் பயிற்சி நிலையம், சின்னசேலம்- தொலைபேசி எண் 9380114610 ஆகிய முகவரிகளில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.