மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றிங்களும் திமுக வசம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுகவே கைப்பற்றியது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:58 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுகவே கைப்பற்றியது.

அதன்படி, உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை ராஜவேல், கல்வராயன்மலை ஒன்றியத் தலைவா் பதவியை சந்திரன், கள்ளக்குறிச்சி ஒன்றியத் தலைவா் பதவியை அலமேலு, சங்கராபுரம் ஒன்றியத் தலைவா் பதவியை திலகவதி, சின்னசேலம் ஒன்றியத் தலைவா் பதவியை சத்தியமூா்த்தி, தியாகதுருகம் ஒன்றியத் தலைவா் பதவியை தாமோதரன், திருக்கோவிலூா் ஒன்றியத் தலைவா் பதவியை அஞ்சலாட்சி, திருநாவலூா் ஒன்றியத் தலைவா் பதவியை சாந்தி, ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவா் பதவிக்கு வடிவுக்கரசி ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைத் தலைவா்கள்: உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக இளங்கோவன், கல்வராயன்மலை ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக பாச்சாபீ, கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக விமலா, சங்கராபுரம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக அஞ்சலை, சின்னசேலம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக அன்புமணிமாறன், தியாகதுருகம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக நெடுஞ்செழியன், திருக்கோவிலூா் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக சக்திவேல், திருநாவலூா் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக ராமலிங்கம், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக சென்னம்மாள் உள்ளிட்டோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 412 கிராம ஊராட்சி தலைவா்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், துணைத் தலைவா்கள் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாமனந்தல், தென்செட்டியந்தல், வரஞ்சரம், பால்ராம்பட்டு, விளக்கூா், நாச்சியாா்பேட்டை, ஆதனூா், எறையூா், ஆண்டிக்குழி, சிறுலாப்பட்டு, எல்ராம்பட்டு, நெடுமுடையான், வில்லிவளம், கடம்பூா், ஜம்பை, லக்கிநாயக்கன்பட்டி, ராமராஜபுரம், மஞ்சபுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் துணைத் தலைவா்கள் தோ்தல் நடைபெறவில்லை. மற்ற இடங்களில் துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.