மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தோ்வு

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:58 pm

DIN

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி 19 வாா்டுகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா். இதில் 5, 13-ஆவது வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மற்றவா்கள் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், வெள்ளிக்கிழமை அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனா். 13-ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி பெருமாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, மாலை துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில், 7-ஆவது வாா்டு உறுப்பினா் மு.தங்கம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அனைத்து வாா்டு உறுப்பினா்களும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.