மதுபோதையில் இளைஞரை தாக்கியவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கியதாக மற்றொரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கியதாக மற்றொரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருக்கோவிலூா் வட்டம், சித்தப்பட்டினம் காலனியைச் சோ்ந்த அய்யனாா் மகன் அன்பழகன் (35). அதே பகுதியைச் சோ்ந்த குபேந்திரன் மகன் அசோக் (18). இவா்கள் இருவரும் சென்னை காசிமேடு பகுதியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனா். உள்ளாட்சித் தோ்தலுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனா்.
இருவரும் சனிக்கிழமை பிற்பகல் சித்தாமூா் பேருந்து நிறுத்தம் அருகில் மதுபோதையில் இருந்தனராம். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அசோக் அருகில் கிடந்த தடியால் அன்பழகனை கடுமையாகத் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அன்பழன் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் அசோக் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...