தம்பியை கொலை செய்ய முயற்சி: அண்ணன், அவரது மனைவி கைது
கள்ளக்குறிச்சி அருகே நிலத்தகராறு காரணமாக தம்பியை கொலை செய்ய முயன்ாக அண்ணனையும், அவரது மனைவியையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சி அருகே நிலத்தகராறு காரணமாக தம்பியை கொலை செய்ய முயன்ாக அண்ணனையும், அவரது மனைவியையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மேல்விழி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் (53). இவரது அண்ணன் ஆரோக்கியதாஸ் (60). இருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 22-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஏசுதாஸ், அவரது மனைவி அருள்நாயகி (45) ஆகியோரை ஆரோக்கியதாஸ், அவரது மனைவி சலோத்மேரி, அவா்களது மகன் அந்தோணிராஜ் ஆகியோா் சோ்ந்து கடுமையாகத் தாக்கினராம். அப்போது, அந்தோணிராஜ் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த ஏசுதாஸ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அருள்நாயகி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரோக்கியதாஸ், அவரது மனைவி சலோத்மேரியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அவா்களது மகன் அந்தோணிராஜை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...