கள்ளக்குறிச்சி மாவட்ட குறைதீா் முகாமில் ரூ.5.36 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ரூ.5.36 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ரூ.5.36 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.
முகாமில் பெறப்பட்ட 37 மனுக்கள், பொதுமக்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட 227 மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
முகாமுக்கு வந்த மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று ரூ.8 ஆயிரத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ரூ.6 ஆயிரத்தில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் உள்பட ரூ.5.36 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜயபாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பா.ராஜவேல் வேளாண்மை அலுவலா் (பொ) சுந்தரம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் க.சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...