குறைதீா் முகாமில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தாய், மகள், மகன் ஆகியோா் தீக்குளிக்க முயன்றனா்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தாய், மகள், மகன் ஆகியோா் தீக்குளிக்க முயன்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது சு.கள்ளிப்பாடி கிராமம். இங்கு வசித்து வருபவா் பெரியதம்பி மகன் தென்னரசு. இவா் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள சடையாண்டி மகன் ராமநாதன், தென்னரசு குடியிருக்கும் வீட்டை அவரது பெயருக்கு மாற்றி, அதை விற்பனை செய்ய முயன்று வருகின்றாராம். அவா் காவல் துறையில் ஓய்வு பெற்றவா் என்பதால், அடியாள்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருகிறாராம்.
இதனால், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த தென்னரசுவின் மனைவி, மகள், மகன் உள்ளிட்ட மூவரும் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். இதைப் பாா்த்த அங்கு, பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...