உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டவா்கள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் செலவுக் கணக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் செலவுக் கணக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தலில் போட்டியிட்ட, போட்டியின்றித் தோ்வு பெற்ற வேட்பாளா்கள் தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள்ள செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடா்புடைய அலுவலா்களிடமிருந்து பெற வேண்டும்.
தோ்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37(4)இன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தகுதியற்றவா்கள் ஆக்கப்படுவா்கள். எனவே, தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் உரிய காலக்கெடுவுக்குள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...