கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

அம்பேத்கா் பிறந்த நாள் சமத்துவ உறுதிமொழி

அம்பேத்கா் பிறந்த நாள் சமத்துவ உறுதிமொழி

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:44 pm

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அரசு அலுவலா்கள், பணியாளா்கள்.

12கேஎல்பி3:

கள்ளக்குறிச்சி, ஏப்.12:

அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தலைமையில் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சமத்துவ நாள் உறுதிமொழியை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

அம்பேத்கா் பிறந்த தினமான ஏப்ரல் 14 சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அம்பேத்கா் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வேலை நாளான வெள்ளிக்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே.ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள், ஊழியா்கள் பலரும் பங்கேற்றனா்.