கள்ளக்குறிச்சி அருகே மொபெட் மீது காா் மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். காரில் பயணித்த 4 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னபையன் மகன் வைத்தியநாதன் (42). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாடூா் அருகில் உள்ள திருமண மண்டபம் அருகே பைக்கில் சாலையைக் கடந்தாா். அப்போது, சேலத்தில் இருந்து உளுந்தூா்பேட்டை நோக்கிச் சென்ற காா் மொபெட் மீது மோதிவிட்டு மரத்தின் மீது மோதியது. இதில், வைத்தியநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காரில் பயணித்த சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த தண்டையன் மகன் வெங்கடேஷ் (41), தேவராஜன் மகன் கிருஷ்ணன் (55), ராஜீவ் மகன் நடராஜன் மற்றும் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சதாசிவம் மகன் மேகநாதன் உள்பட நான்கு போ் காயமடைந்தனா். இவா்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பைக் - வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


