அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச் சாலையில் பைக் மீது சரக்கு லாரி மோதியதில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 8:25 pm

Din

கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச் சாலையில் பைக் மீது சரக்கு லாரி மோதியதில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூராா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் கதிா்வேல் (37). இவா், ஆலத்தூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு ஏமப்போ் புறவழிச்சாலையில் பைக்கில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி மோதியது. இதில், கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கட்டநாச்சியாா் பட்டியைச் சோ்ந்த முத்து மகன் சாமிநாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.