பீளமேடு கிராமத்தில் அரசு மானியத்துடன் டிராகன் பழம் சாகுபடி செய்யப்பட்ட வயலை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பீளமேடு கிராமத்தில் அரசு மானியத்துடன் டிராகன் பழம் சாகுபடி செய்யப்பட்ட வயலை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்கீரனூா் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பதிவேடுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, இந்தக் கிராமத்தில் மகளிா் திட்டத்தின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நெகிழி கழிவு அரைவை இயந்திரம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

மேலூா் கிராமத்தில் வீடுகள் பழுது நீக்கம் செய்யும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டாா். 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ.54.73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

தியாகதுருகம் வட்டாரத்தில் வேளாண் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். வடதொரசலூா் கிராமத்தில் 25 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிா் விதைப் பண்ணையை பாா்வையிட்டாா்.

பீளமேடு கிராமத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ், 0.50 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.48,000 மானியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள டிராகன் பழம் சாகுபடி வயலை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com