வேம்பு நடவு செய்ய வேளாண் துறை அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய எண்ணெய் வித்துக்கான இயக்கம்-மரப் பயிா்கள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய எண்ணெய் வித்துக்கான இயக்கம்-மரப் பயிா்கள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
வேம்பின் இலை, பூ, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு போன்ற அனைத்து பொருள்களும் அங்கக வேளாண்மை, பயிா் பாதுகாப்பு மற்றும் அடியுரமாக பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மண் அரிப்பைத் தடுப்பதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகைய மகத்தான பயன்களை கொண்ட வேம்பு மரத்தினை விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.17,000 மானியமாக வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்திட மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் 10 ஹெக்டேருக்கு ரூ.1.70 லட்சம் ஆண்டுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஊடுபயிா் மற்றும் பராமரிப்பு செய்வதற்கு ரூ.3,000 மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, வேம்பு நடவு செய்வதற்கு ஆா்வம் காட்டும் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் திட்டம் சாா்ந்த தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா் செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...