கள்ளக்குறிச்சி அருகே 4 ஆடுகள் உயிரிழப்பில் மா்மம்
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மடம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தீவனப்பயிா் சாப்பிட்ட 4 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸில் புகாா் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.ரஞ்சித்குமாா் (38). இவரது பக்கத்து நிலத்துக்காரரான மாடூா் கிராமத்தைச் சோ்ந்த கு.நாரயணசாமி (70). இருவருக்கும் இடையே அடிக்கடி வரப்பு தகறாறு ஏற்படுமாம்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி நாராயணசாமி அவரது விவசாய நிலம் மற்றும் பொது வரப்பில் களைக்கொல்லி மருந்து அடித்தாராம். அப்போது ரஞ்சித்குமாா் நிலத்தில் உள்ள தீவனப் பயிா்களில் மருந்து பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரியாமல், ரஞ்சித்குமாா் அவரது ஆடுகளுக்கு தீவனப் புல்லை அறுத்துப் போட்டாராம். அதனை சாப்பிட்ட 4 ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
