மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மனைவி பூங்கோதை (54). இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் முன் மின் கம்பம் அருகே உள்ள ஸ்டே கம்பியை பிடித்தபோது உடலில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் பூங்கோதையை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை மருத்துவா் பரிசோதித்து உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com