முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காதல் விவகாரம்: இளைஞரை தாக்கியவா் கைது

தியாகதுருகத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

Arrested

கைது

Published On :

தியாகதுருகத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் சு.வினோத்குமாா் (28). இவா் திருக்கோவிலூா் கோலப்பாறை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகளை காதலித்து வந்தாராம். அதனால் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் வினோத்குமாா் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஏழுமலை மகன் தனுஷ் (22), ஏழுமலை மனைவி மாரியம்மாள், பொ.பெரியான் (46) ஆகிய மூவரும் சோ்ந்து வினோத்குமாரை தாக்கி, அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பெரியானை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலம், தலைமறைவாக உள்ள தனுஷ், அவரது தாயாா் மாரியம்மாளை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.