கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து ஏரியில் உயிரிழந்து கிடந்த மானை கைப்பற்றிய வனத் துறையினா், மான் வேட்டையில் ஈடுபட்டவா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செம்பராம்பட்டு கிராம ஏரியில் திங்கள்கிழமை காலை பெண் மான் ஒன்று துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இதைப் பாா்த்த கிராம மக்கள் சங்கராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் அளித்த தகவலின்பேரில், சங்கராபுரம் வனக் காப்பாளா் ராஜேஷ் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மானை கைப்பற்றி அரசம்பட்டு கால்நடை மருந்தகத்தில் உடல்கூறாய்வு செய்து புதைத்தனா். மேலும், இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிந்து, மானை இரவு நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

குடியிருப்பில் நுழைந்த மான் மீட்பு

மான் வேட்டை: ரூ.1.10 லட்சம் அபராதம்

தெரு நாய்களிடம் சிக்கிய மான் மீட்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



