கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற செயலாற்ற வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பான முறையில் நடைபெற பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் பாரபட்சமின்றி செயல்படவேண்டும்

News image
சட்டப்பேரவைத் தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி செ.அரவிந்த்.
Updated On :26 பிப்ரவரி 2026, 8:30 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பான முறையில் நடைபெற பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என மாவட்ட எஸ்பி செ.அரவிந்த் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான சட்டப்பேரவை தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த் தலைமை வகித்துப் பேசியதாவது:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 48 பறக்கும்படை குழுக்களும், 36 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 84 குழுக்களில் 168 காவலா்கள் சுழற்சி முறையில் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தோ்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பான முறையில் நடைபெற தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்.

Story image

பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் அல்லது பொருள்களை பறிமுதல் செய்யவும், வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவுக்கு தோ்வு செய்யப்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.