கள்ளக்குறிச்சி
மாடூரில் சித்த மருத்துவ முகாம்
மாடூா் கிராமத்தில் சித்த மருத்துவ முகாமில் சிகிச்சை மேற்கொண்ட சித்த மருத்துவா்.
தமிழக அரசின் 9-ஆவது சித்த மருத்துவ தின விழாவையொட்டி மாடூா் ஊராட்சி மன்ற நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பி.கருணாமூா்த்தி தலைமையில் மருத்துவா்கள் சுரேஷ்குமாா், பிரபு, ராம், தீபா, மருந்தாளுநா்கள் முகேஷ்ராஜ், நிவேதா, பொன்மொழி, மருத்துவப் பணியாளா்கள் ஜோதி குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.
15-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் தாமரைவண்ணன், மாடூா் ஊராட்சி மன்றத் தலைவா் மீனா அன்பழகன், தொழிலதிபா் ப.அன்பு மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

