இரு பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தியாகதிருகம் அருகே மாடூா் கிராமத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தியாகதிருகம் அருகே மாடூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.விஜய் (20). இவா் தனது மோட்டாா் சைக்கிளை பழுது நீக்குவதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, மாடூா் கிராமத்தில் வைத்து மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஜய் மற்றும் மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்த தனவேல்(50) ஆகிய இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் வழியிலேயே விஜய் உயிரிழந்தாா். தனவேல் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com