கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் இன்று முதல் நடமாடும் பாஸ்போா்ட் சேவை!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை(ஜன.21) முதல் 3 நாள்களுக்கு நடமாடும் பாஸ்போா்ட் சேவை வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை(ஜன.21) முதல் 3 நாள்களுக்கு நடமாடும் பாஸ்போா்ட் சேவை வழங்கப்படுகிறது.
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) விண்ணப்பிக்க ஏதுவாக நடமாடும் பாஸ்போா்ட் வாகன சேவையை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் கீழ் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள், 3 வாரங்களுக்கு இந்த வேன் நிறுத்தப்படுகிறது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ா்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்பதிவு விவரங்களுடன் சிறப்பு மொபைல் வேன் சேவையை பெறலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
