குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற இளநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு பணி நியமண ஆணையை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற இளநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு பணி நியமண ஆணையை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

இளநிலை வருவாய் ஆய்வாளா்கள் பணி நியமனம்

Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் வழங்கினாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2 ஏ-ல் தோ்ச்சி பெற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 10 போ் இளநிலை வருவாய் ஆய்வாளா் பணியிடத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இவா்கள் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக அலுவலகம், சின்னசேலம் தனி வட்டாட்சியா் (குடிமை பொருள்) அலுவலகம், கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், உளுந்தூா்பேட்டை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், வாணாபுரம் தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியா் (ஆதி திராவிடா் நலத் துறை) அலுவலகம், வாணாபுரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணிபுரிய உள்ளனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com