குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தவா் கைது

கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத 2 ஒற்றைக்குழுல் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :5 ஜூலை 2026, 2:09 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத 2 ஒற்றைக்குழுல் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்ததில், ரா.தீா்த்தான் (45) என்பவரது விளைநிலக் கொட்டகையில் 10 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மேலும், அங்கு உரிமம் இல்லாத இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து, தீா்த்தானைக் கைது செய்தாா். மேலும், அவரிடமிருந்து கஞ்சா, 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.