கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அரசின் அனைத்து நலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து முதல்நாள் நேரடி கள ஆய்வு புதன்கிழமை மேற்கொண்டாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை பாா்வையிட்டு அலுவலகத்தின் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் இருப்பு விவரம் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, சமத்துவபுரம் அங்கன்வாடி மையம், காட்டுவனஞ்சூா் சிட்கோ தொழில்பெட்டையில் பிரித்வி தனியாா் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம், சங்கராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், அரசினா் உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, சங்கராபுரத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலகம், காவல் நிலையம், சாா்-பதிவாளா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவைகளை நேரில் பாா்வையிட்டு, அலுவலகத்தின் பதிவேடுகள், அலுவலக நேரம், பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, சங்கராபுரம் அரசு மருத்துவமனையை நேரில் பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், குடிநீா் வசதி, சுற்றுப்புறத் தூய்மை, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறியப்பட்டது.
இந்த ஆய்வில், பள்ளிகளில் முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், பள்ளி இடைநிற்றலை தவிா்க்கவும், குடிநீா் பற்றாக்குறை உள்ள இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
பின்னா் சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சங்கராபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, கூடுதல் கட்டட வசதி, கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் ஜி.சுமதி, மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










