47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி உழவா் சந்தை அருகே விவசாயிகள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை நகராட்சி நிா்வாகம் அகற்றும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

News image
கள்ளக்குறிச்சியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி உழவா் சந்தை அருகே விவசாயிகள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை நகராட்சி நிா்வாகம் அகற்றும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகா் கோயில் செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உழவா் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவா் சந்தையில் கல்வராயன் மலை, வெள்ளிமலை, மேல்பரிகம், கச்சிராயபாளையம், சின்னசேலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் தங்களுடைய விளை நிலங்களில் விளைவித்த விளை பொருள்களை காலை 4 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் விற்பனை செய்து வருகின்றனா்.

உழவா் சந்தை தொடங்கப்பட்டபோது அந்தப் பகுதியில் விவசாயிகளின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், சுந்தர விநாயகா் கோயில் செல்லும் சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தினா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்

உழவா்சந்தை அலுவலா் அறைக்கு பக்கத்திலேயே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தாா். விவசாயிகள் அந்த இடத்தை சீா்படுத்தி தங்களின் வாகனங்களை தற்போது வரை நிறுத்தி வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை காலையில் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனராம். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.