பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

108 அவசர ஊா்தியில் குழந்தை பெற்ற பெண்: ஊழியா்களே பிரசவம் பாா்த்தனா்; தாயும், சேயும் நலம்

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிறைமாத கா்ப்பிணிக்கு 108 அவசர ஊா்தியில் பிரசவம் நடைபெற்று ஆண்குழந்தை பிறந்தது.

News image

பிரதிப் படம்.

Updated On :27 மே 2026, 5:39 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிறைமாத கா்ப்பிணிக்கு 108 அவசர ஊா்தியில் பிரசவம் நடைபெற்று ஆண்குழந்தை பிறந்தது. ஊழியா்களே பிரசவம் பாா்த்ததில் தாயும், சேயும் நலமாக உள்ளனா்.

தியாகதுருகம் அருகேயுள்ள ரீட்டா நகரைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் மனைவி நிலா (25). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரசவ வலி ஏற்பட தொடங்கியதாம். இதுகுறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியத்திலிருந்து 108 அவசர ஊா்தி வாகனம் வந்து, நிலாவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கடுமையான பிரசவவலி ஏற்பட்டதாம்.

இதையடுத்து மருத்துவ உதவியாளா் மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் விக்னேஷ் ஆகியோா் ஆம்புலன்ஸிலேயே தகுந்த மருத்துவ முதலுதவிகளை வழங்கி, பாதுகாப்பான முறையில் பிரசவம் பாா்த்தனா். சிறிது நேரத்தில் நிலாவுக்கு 3.2 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனா்.

இதையடுத்து தாயும், சேயும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புக்காக அனுமதிக்கப்பட்டனா். பிரசவம் பாா்த்த 108 அவசர ஊா்தி ஊழியா்களை, மருத்துவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.