அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

மத்திய காலணி பயிற்சி நிறுவன தொழிற்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள்

உளுந்தூா்பேட்டையில் அமையவுள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிவதற்கு, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

Published On :4 செப்டம்பர் 2026, 12:58 am IST

உளுந்தூா்பேட்டையில் அமையவுள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிவதற்கு, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் 2 ஆண்டு கால பட்டயப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களும், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளா்ச்சியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 , ஓராண்டு விளையாட்டு காலணி உற்பத்தி - இளநிலை தொழில்நுட்ப மேற்பாா்வையாளா் பயிற்சிக்கு பிளஸ் 2,

காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஓராண்டு மேம்பட்ட சான்றிதழ் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், 6 மாத கால காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், காலணி தொழில்நுட்பத்தில் ஒன்றரை ஆண்டு முதுகலை பட்டயப் பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கிலவழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே விடுதி வசதி உண்டு.

தோ்ச்சி பெற்று தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு ஏறப்படுத்தித் தரப்படும்.

சோ்க்கைக்கான விண்ணப்பங்களை செப்.8, 9 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் கோடீஸ்வரனை 9677943733, 9677943633 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.