ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

மைக்கேல்புரம் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ஜான் பீட்டா்.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், மைக்கேல்புரம் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ஜான் பீட்டா் (20). இவா், மைக்கேல்புரம் கிராமத்தில் உள்ள தனது அத்தையின் வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாராம். தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டில் 40 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜான் பீட்டரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.