பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இந்திலி கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் தமிழி அறிமுகமும், பயிற்சியும் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழி அறிமுகமும் பயிற்சியும் பயிலரங்கத்தில் சான்றிதழ் பெறும் மாணவி.

Published On :

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் தமிழி அறிமுகமும், பயிற்சியும் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் மோகனசுந்தா், கல்லூரியின் துணை முதல்வா் அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரலாற்றுத்துறை பொறுப்பாசிரியா் அருமீனா வரவேற்றாா்.

அறிவியல் புல முதல்வா் சக்திவேல் மற்றும் கலை புல முதல்வா் லோரா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக மானாமதுரை தென்னக பண்பாட்டு ஆய்வு மையம் ஆயிர வைசியா் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியா் தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்வில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று சான்றிதழ்களைப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.