குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்கக் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்கக் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன.
இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், அங்குள்ள குடியிருப்புகளுக்கு தனி கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாவாணர் நகர் கிளை சார்பில் குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மூத்த நிர்வாகி ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். பொருளாளர் ஞானவேல், துணை செயலாளர்கள் அஞ்சலிதேவி, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயலாளர் விஸ்வநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம், தொகுதிச் செயலாளர் தேவசகாயம், மாநிலக் குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் வீராங்கன், நலவேந்தன், முரளி, சித்ரா, அய்யனார், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...