பொலிவுறு நகர சின்னத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

புதுச்சேரிக்கான பொலிவுறு நகரச் சின்னத்தில் பெயரில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
Updated on
1 min read

புதுச்சேரிக்கான பொலிவுறு நகரச் சின்னத்தில் பெயரில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து புதுச்சேரி அதிமுக முன்னாள் இணைச்செயலரும், முன்னாள் எம்.பியுமான ராôமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்ட வடிவமைப்பு சின்னப் போட்டியில் அகில இந்திய அளவில் புதுச்சேரிக்கு முதல்பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இந்த சின்னம் தவறான கருத்துகளை பிரதிபலிக்கிறது. முதலாவதாக, இந்த சின்னத்துக்கு "போண்டியிக்ஷி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
 இந்தப் பெயர் பிரெஞ்சுக்காரர்கள் தங்களது காலனியை புதுச்சேரியில் 17-ஆம் நூற்றாண்டில் உருவாக்கியபோது வைத்த
 பெயர். அவர்கள் 1954 ஆம் ஆண்டு புதுச்சேரியை விட்டுச்சென்ற போது கூட அதனை பாண்டிச்சேரி என்றுதான் அழைத்தனர். அந்தப் பெயரை மாற்றி அதன் உண்மையான பெயரான புதுச்சேரி என்று மாற்ற வேண்டுமென்று புதுவையை ஆண்ட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுதான் 1980-ஆம்ஆண்டு முதன்முதலாக தீர்மானத்தை நிறைவேற்றியது.
 அந்த தீர்மானத்தின் படி நான் மக்களவை உறுப்பினராக இருந்தபோது 24.8.2006 அன்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, மக்களவையில் புதுச்சேரி என்று பெயர் மாற்றப்பட்டு பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், பொலிவுறு நகரத்துக்கு புதுச்சேரி என்று பெயரிடுவதற்குப் பதிலாக போண்டியிக்ஷி என்று பெயரிட்டிருப்பது சட்டத்தை மீறிய, குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.
 பிரெஞ்சு அரசு இந்தத்திட்டத்திற்காக நிதி உதவி அளிக்க இருப்பது என்பதால் நாம் புதுச்சேரியை 17 ஆம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமோ அல்லது நமது கலாசாரத்தையும் சட்டத்தையும் சிதறடித்து விட்டு பிரெஞ்சுக் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியமோ இல்லை. நியாயத்தை உணர்ந்த பிரெஞ்சுக்காரர்களே இதை ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சின்னத்தில் டியூப்ளேவின் சிலை இடம் பெற்றிருப்பதும் பொருத்தமாக இல்லை. இவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆளுநராக 1742 இல் நியமிக்கப்பட்டார் என்பது உண்மை. ஆனால் இப்படிப்பட்ட சின்னத்தில், பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரிக்கு சுதந்திரம் பெறுவதில் பெரும் பங்களித்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சிலை இடம் பெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
 அவர்தான் 1954 இல் புதுச்சேரியை தனது செல்லக் குழந்தையாக தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கான நிதியை தாராளமாக வழங்கினார். புதுச்சேரியின் வளர்ச்சி மத்திய அரசின் பொறுப்பு என்று கருதினார். எனவே அவரது சிலை இந்த சின்னத்தில் இடம் பெற வேண்டியது மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com