2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கதர் கிராம வாரியத்தில் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம்: அமைச்சர் ஷாஜகான்

கதர் கிராம வாரியத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:51 am

தினமணி

கதர் கிராம வாரியத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.
 புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மண்டல அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
 இந்த அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் திறந்து வைத்தார்.
 பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கதர் வாரிய அலுவலகத்தில் பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற ஆன்லைன் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
 இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும். 35 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும் என்றார்.
 தலைமைச் செயலர் அலுவலர் கணேசன் வரவேற்றார். லட்சுமிநாராயணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் வாரிய துணை இயக்குநர் அமுதகுமார், வங்கி மேலாளர்கள், வாரிய அதிகாரிகள், பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் திரளாகக் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் சேக்கிழார் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.