டெங்கு காய்ச்சல் மருத்துவ மேலாண்மை பயிலரங்கம்
சுகாதாரத் துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் புதுவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை


சுகாதாரத் துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் புதுவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கான டெங்கு காய்ச்சல் மருத்துவ மேலாண்மை பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
துணை இயக்குநர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். பயிலரங்கை தேசிய கிராமப்புற சுகாதார இயக்குநர் காளிமுத்து தொடக்கி வைத்துப் பேசியதாவது:
டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் நோயாகும். டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் டெங்கு ஏற்படுகிரது.
இதில் டைப்-2 மிகவும் வீரியமானது. இதுதான் புதுவையில் பரவலாக உள்ளது. சுகாதாரத்துறை நினைத்தால் மட்டும் எதுவும் செய்ய முடியாது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
திட்ட அதிகாரி சுந்தர்ராஜ் பேசுகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு 1,812 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்தாண்டு புதுவையில் 3,257 பேரும், காரைக்கால் 815, மாஹே 60, ஏனாம் 4 என மொத்தம் 4,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2012க்குப் பிறகு தற்போதுதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
பொது மருத்துவமனை மருத்துவத்துறை தலைவர் ரமேஷ், ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மருத்துவ அதிகாரி பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் மருத்துவ மேலாண்மை தொடர்பான பயிற்சி வழங்கினர்.
இதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஜிப்மர் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சித்த மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். பூச்சியியல் வல்லுநர் குணசேகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...