இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

11-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 11-ஆம் தேதி,  புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது என

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:11 am

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 11-ஆம் தேதி,  புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது என புதுச்சேரி அரசு சமூக நலத்துறை இயக்குநர் சாரங்கபாணி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசின் சமூக நலத்துறை இந்த ஆண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.  போட்டிகள் வரும் நவ.11-ஆம் தேதி (சனிக்கிழமை) புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகளின் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.  போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில்  கலந்து கொள்ள ஏதுவாக, புதுவை அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வரும் 11-ஆம் தேதி காலை 8 மணியளவில் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கிற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போட்டிகளில் பங்கு பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.