டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் 

புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:43 am IST

புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், விண்ணப்பம் அளித்தும் தொழிலாளர்களை நலச்சங்க கட்டுமான வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும், தீபாவளி உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தை வழங்க வேண்டும், கல்வி உதவி, இதர நலப் பயன்களை உடனே வழங்க வேண்டும், மருத்துவம் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
 அதன்படி, சங்கச் செயலாளர் சீனுவாசன் தலைமையில் ராஜீவ் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை திரண்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அங்கிருந்து பேரணியாக காந்தி நகரில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது போலீஸார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
 இதனையடுத்து தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் செய்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.