தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பள்ளியில் குழந்தைகள்  அறிவியல் திருவிழா

புதுவை அறிவியல் இயக்கம் சார்பில், குழந்தைகள் அறிவியல் திருவிழா புதுச்சேரி அருகேயுள்ள காட்டுப்பாக்கம் அப்ரிஸ் தொடக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:59 am

DIN

புதுவை அறிவியல் இயக்கம் சார்பில், குழந்தைகள் அறிவியல் திருவிழா புதுச்சேரி அருகேயுள்ள காட்டுப்பாக்கம் அப்ரிஸ் தொடக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
விஞ்ஞானி தாமஸ் பிரகாசம் நினைவாக நடைபெற்ற இத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் அ.ஹேமாவதி,  உதவிக்கரங்கள் இல்ல  நிர்வாகி ஆலிஸ்
தாமஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் விஜயா கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினார். 
 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செரிப் ஒருங்கிணைத்தார்.  புதுச்சேரியில் உள்ள துளிர் இல்லங்களைச் சேர்ந்த அறிவியலில் சாதனைகள் செய்த 60 மாணவர்கள்  கலந்துகொண்டனர். அறிவியல் முறைகள் குறித்து அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. அறிவோம் அறிவியல்,  கணக்கும் இனிக்கும்,  பாட்டும் விளையாட்டும்,  இயற்கையை படிப்போம், மந்திரமா? தந்திரமா?,  கற்பனையும் கைத்திறனும் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற்றன.   கருத்தாளர்களாக சந்திரா, ஹேமாவதி, கமலக்கண்ணன், அருண் நாகலிங்கம், ராதிகா, பக்தவத்சலம், சரவணன், இளங்கோ, அரவிந்தராஜா, சுந்தரமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.