பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

மானிய விலையில் விதைகள்,  இடுபொருள்களை வழங்க கோரிக்கை

மத்திய,  மாநில அரசுகள் விதைகள்,  இடுபொருள்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி விவசாயிகள் சங்கம்  கோரிக்கை விடுத்தது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:50 am IST

மத்திய,  மாநில அரசுகள் விதைகள்,  இடுபொருள்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி விவசாயிகள் சங்கம்  கோரிக்கை விடுத்தது.
இந்தச் சங்கத்தின் வில்லியனூர் தாலுகா மாநாடு,  திருக்கனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் இரா.விசுவநாதன்,  நாரா.கலைநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் முன்னிலை வகித்தார்.
மாநாட்டில் புதுச்சேரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கீதநாதன், ரவி, பெருமாள், கணேசன், பாலகிருஷ்ணன், கந்தநாதன், மன்நாதன், முருகையன், குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில்,  விவசாயிகள் பெற்றுள்ள  அனைத்து வங்கிக் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.  
60 வயது நிரம்பிய விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்கள்,  கிராமப்புற கைவினை கலைஞர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  
மத்திய,  மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான விதைகள்,  உரம்,  பூச்சிக் கொல்லி மருந்துகளை வழங்க வேண்டும்.  பாசிக்,  பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.  
அரியூர் மற்றும் லிங்கரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலைகளைத் திறந்து இயக்கவும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட கரும்புக்கு நிலுவைத் தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.