புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் செயலாளர் கோ. அ. ஜெகன்நாதன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில அரசு கடந்த 2009, பிப்ரவரி மாதம் விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது என அரசாணை வெளியிட்டது.
ஆனால், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் சில பொதுநல அமைப்புகளும் மேற்கண்ட தடை சட்டத்தை மதிக்காமல், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் விதிமுறைகள், சட்டத்தை மீறி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என, 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விளம்பரப் பதாகை தடைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கடந்த 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு புதுவைக்கும் பொருந்தும் என்பதால், புதுவை அரசு 2009-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின்படி, டிஜிட்டல் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவற்றை பொதுஇடங்களில் வைக்க தடை விதிக்க
வேண்டும்.
வரும் புத்தாண்டு முதல் இந்த உத்தரவை புதுவை அரசு அமல்படுத்தவும், புதுச்சேரியின் அழகை பாதுகாத்திடவும், விபத்தில்லா புதுச்சேரியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்ம பூஷண் விருது! தனுஷ் - 55 படப்பிடிப்பில் கேக் வெட்டிய நடிகர் மம்மூட்டி!

வெனிசுவேலா நிலநடுக்கம்! 164 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! - இடைக்கால அதிபர் அறிவிப்பு!

சுந்தர் சி - குஷ்பு மகள் திருமணம் கோலாகலம்!

தோல்வியுற்றும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய கனடா!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP


