என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:30 am IST

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, விழுப்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பேருந்தில் சென்று வந்தபோது, வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தச் சிறுமியை விக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்ததுடன், அதை காண்பித்து சிறுமியை மிரட்டி ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸார் விக்கி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்கி (20), முகிலன் (19), சூர்யா (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.