புதுவை விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் முதல்வருமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறை சார்பில் மறைமலையடிகள் சாலை- கடலூர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அவரது மகனும், பேரவைத் தலைவருமான வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி.ஆறுமுகம், ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் செயலாளர் சாம்ராஜ், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சூசைராஜ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
முன்னதாக, வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் பிரதேச கமிட்டி தலைமை அலுவலகத்தில் வெங்கடசுப்பா ரெட்டியார் உருவப்படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் எம்டிஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முறையாகப் பராமரிக்கப்படாத ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையம்! மேம்படுத்தி விரிவுபடுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

விடுமுறை நாள்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் பயணம்!

மூடப்படும் அபாயத்தில் தில்லி ரேஸ் கிளப்! எதிா்கால கவலையால் வெளியேறும் பந்தய குதிரைகள்!






