புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காரைக்கால் கடற்கரையில் சித்திரை கோடை கொண்டாட்டம்

காரைக்கால் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சித்திரை கோடை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 11:07 pm

DIN

காரைக்கால் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சித்திரை கோடை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் கடற்கரைக்கு கோடை வெயில் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மக்கள் செல்கிறார்கள். சீகல்ஸ் என்கிற அரசு சார்பு நிறுவனம் சார்பில் மக்களுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக சிறப்பு அலுவலராக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பி. கீதா நியமிக்கப்பட்டதையொட்டி, அவரது முயற்சியால் மக்களின் விருப்பத்துக்கேற்ப பல்வேறு உணவு தயாரித்து விற்பனை அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. சீகல்ஸ் சார்பிலும், மகளிர் குழுவினர் சார்பிலும் ஊட்டச்சத்துமிக்க உணவு விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.
பொதுமக்களைக் கூடுதலாக கடற்கரைக்கு வரவழைக்கும் நோக்கிலும், மக்கள் குதூகலமாக பொழுதை கழிக்கும் வகையிலும் கோடை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்ட்டது. தென்னிந்திய
சமூகக் கலைக்கூடம் சார்பில் கிராமிய நடனம், தப்பாட்டம்,
ஒயிலாட்டம், கரகம், காவடியாட்டம், கும்மியாட்டம் ஆகியவை இடம்பெற்றன.
முன்னதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முரசு கொட்டித் தொடங்கிவைத்தார். இரவு 7 முதல் 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக சிறப்பு அலுவலர் பி.கீதா, சீகல்ஸ் நிர்வாக மேலாளர் ஜெயபால் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.