நெட்டப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் நிகழ்ச்சியை புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
புதுவை தெற்கு மாநிலத்துக்கு உள்பட்ட 12 தொகுதிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த கையேடுகள், துண்டறிக்கைகள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நெட்டப்பாக்கம் தொகுதி திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொகுதி முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. நெட்டப்பாக்கம் பிரதான சாலையில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் சண்.குமரவேல், மருத்துவர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன், தொகுதி செயலர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தொகுதி துணைச் செயலர்கள் பூபதி, மங்கையர்கரசி, மாநில பிரதிநிதிகள் திருமாறன், செல்வம், நிர்வாகிகள் அண்ணா, மணிவண்ணன், ராமமூர்த்தி, தாண்டவராயன், மகாதேவன், குமாரசாமி, அசார், சங்கர், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








