தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஊதியம் முழுவதையும் தொகுதிக்கே செலவு செய்ய நியமன எம்.எல்.ஏ. முடிவு

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் தனது ஊதியம் முழுவதையும் பொதுமக்கள் நலனுக்காகச் செலவிட நியமன எம்.எல்.ஏ.வும், பாஜக மாநிலத் தலைவருமான வி.சாமிநாதன் முடிவு செய்துள்ளார்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:27 am IST

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் தனது ஊதியம் முழுவதையும் பொதுமக்கள் நலனுக்காகச் செலவிட நியமன எம்.எல்.ஏ.வும், பாஜக மாநிலத் தலைவருமான வி.சாமிநாதன் முடிவு செய்துள்ளார்.
 புதுவையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே, நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கும் ஒரு வழியாக ஊதியம் வழங்கப்பட்டது. இந்த ஊதியத்தை முழுவதுமாக லாசுப்பேட்டை தொகுதிக்கே செலவிட மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முடிவு செய்துள்ளார்.
 இதற்காக ஆசிரியர்கள் 4 பேர், தையல் ஆசிரியர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வேன் ஓட்டுநர் என 8 பேரை ஊதியம் தந்து வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
 லாசுப்பேட்டை தொகுதி பாஜக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், எலக்ட்ரீசியன், பிளம்பர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று கூலி எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மின்சாரம், பிளம்பிங் சம்பந்தப்பட்ட வேலைகளை இலவசமாக செய்து தருவர்.
 தேவைப்படும் பொருள்களை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் வாங்கித் தர வேண்டும்.
 மேலும், லாசுப்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டை, மடுவுப்பேட்டை, ஜீவானந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள பாஜகவினரின் வீடுகளில் இலவசக் கல்வி பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்துவர்.
 அதுபோல, பெத்துசெட்டிப்பேட்டையில் தையல் பயிற்சி மையம் திறக்கப்பட்டு, பெண்களுக்கு தையல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
 லாசுப்பேட்டை தொகுதி மக்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இலவச வேன் சேவையும் அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வேனை பயன்படுத்திக் கொள்ளலாம். வேன் ஓட்டுநருக்கு ஊதியம் தரத் தேவையில்லை. டீசலை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
 இதுபோல, நியமன எம்.எல்.ஏ. பதவிக்காக வழங்கப்படும் ஊதியம் முழுவதையும் தனது லாசுப்பேட்டை தொகுதிக்கே சாமிநாதன் செலவிட முடிவு செய்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.