
"மோ மோ விளையாட்டு: பொதுமக்களுக்கு காவல் துறை அறிவுரை'
மோ மோ விளையாட்டு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று புதுவை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் கூறினார்.
மோ மோ விளையாட்டு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று புதுவை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் கூறினார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ப்ளூவேல் விளையாட்டு போன்றே மோ மோ என்ற விளையாட்டு கட்செவி அஞ்சல் மூலம் வேகமாகப் பரவி வருகிறது. தெரியாத எண்ணிகளில் இருந்து மோ மோ விளையாட்டு அழைப்பு வந்து விளையாடத் தூண்டுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த விளையாட்டு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் ஏதேனும் மாற்றம் இருந்தால், 100 அல்லது 1031 என்ற ஆகிய காவல் துறை எண்களுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த மோ மோ விளையாட்டு குறித்து புதுவையில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







