ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வது அவசியம்: துணைவேந்தர்

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வது அவசியம் என்று புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார். 

Published On :

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வது அவசியம் என்று புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார். 
 புதுவை மத்திய பல்கலைக்கழத்தில் "ஆராய்ச்சியாளர்களை வளப்படுத்துதல்' என்ற தலைப்பில் பத்து நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. பயிலரங்கை தொடக்கி வைத்து குர்மீத் சிங் பேசியதாவது:
சமூக அறிவியல் பிரிவில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்ட வேண்டும்.  ஏனெனில், இந்தியாவில் ஒரு மாறுபட்ட கால நிலை நிலவுகிறது. ஒரு பகுதியில் வறட்சியாகவும் மற்றொரு பகுதியில் வெள்ளமும் ஏற்படுகிறது.  இந்த நிலையற்ற கால நிலையில் நிலத்தடி நீரை நாடு முழுவதும் எப்படி அதிகரிக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர். முன்னதாக, பல்கலை. கல்வியியல் புல முதன்மையரும்,  துறைத் தலைவருமான மும்தாஜ் பேகம் வரவேற்றார். சமூக அறிவியியல் துறையின் புல முதன்மையர் வெங்கட்ட ரகோத்தம் வாழ்த்திப் பேசினார். தில்லி பல்கலைக்கழகத்தின் அரசியலியல் பேராசிரியர் குர்மீத் கெளர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். சமூக அறிவியியல் துறைப் பேராசிரியர்கள் பாலமுருகன்,  செல்லமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.