நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காரைக்கால் வானொலி நிலையத்தில் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு: ஆட்சியர் பாராட்டு

காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.காரைக்கால் பண்பலை வானொலி (100.3) ஒலிபரப்புத் திறன் 6 கிலோ

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
காரைக்கால் பண்பலை வானொலி (100.3) ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக திங்கள்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு, நிலைய கட்டுப்பாட்டு அறையில் புதிய கூடுதல் திறனை மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார்.
நிலைய நேரடி நிகழ்ச்சியில், நேயர்களிடையே ஆட்சியர் பேசினார். காரைக்கால் வானொலி நிலையத்தில் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு செய்ததன் மூலம் பல மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் நல்ல பயனை அடைவார்கள். கஜா புயலின்போது, காரைக்கால் வானொலியின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.
தொடர்ந்து புயல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதன் மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வானொலி நிலையத்தின் பணி வரவேற்புக்குரியதாக இருந்தது. தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களின் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவை வெற்றிபெற வாழ்த்துவதாக நிகழ்ச்சியின்போது ஆட்சியர் குறிப்பிட்டார்.
காரைக்கால் வானொலி நிலைய இயக்குநர் முனைவர் ஜி. சுவாமிநாதன் பேசும்போது, புதிய கூடுதல் ஒலிபரப்புத் திறன் மூலம் காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், இவற்றையொட்டியுள்ள பிற பகுதிகளிலும் மக்கள் இந்த வானொலியின் நிகழ்ச்சிகளை தரமான தெளிவுடன் கேட்டு மகிழ முடியும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, வானொலி நிலைய துணை இயக்குநர் (பொறியியல்) என். லீலாவதி தலைமை வகித்தார். 
நிகழ்ச்சியை ஒரு நேரடி நிகழ்ச்சியாக நிகழ்ச்சி அதிகாரி ஆர். வெங்கடேஸ்வரன் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.