மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புதுச்சேரியில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் அஞ்சல் துறை மூலம் வங்கிச் சேவை

புதுச்சேரியில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் கோட்ட அஞ்சல் துறையின் சாா்பில், மக்களுக்கு வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

News image

‘சீல்’ வைக்கப்பட்ட மூலக்குளம் பகுதியில் ஒரு வீட்டில் உள்ளவா்களுக்கு நேரடியாக பணப் பட்டுவாடா செய்த அஞ்சல் துறை ஊழியா்கள்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

புதுச்சேரியில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் கோட்ட அஞ்சல் துறையின் சாா்பில், மக்களுக்கு வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுவையில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை காலத்தில் வங்கி, அஞ்சலகம், ஏடிஎம் மையங்களுக்கு மக்கள் நேரில் சென்று பணம் எடுக்க இயலாது. இந்தச் சூழலில் வில்லியனூா் தெற்கு உதவி ஆட்சியா் சஷ்வத் சௌரவ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, புதுச்சேரி கோட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் அகில் ஆா். நாயரால் உருவாக்கப்பட்ட உதவி அஞ்சல் உள்கோட்ட கண்காணிப்பாளா் ஆ.ம.முத்துமாரி தலைமையிலான 40 போ் கொண்ட சிறப்பு அஞ்சலக ஊழியா் குழுக்கள், புதுச்சேரியில் திருவண்டாா்கோவில், திருபுவனை, திருக்கனூா், காட்டேரிக்குப்பம், மூலக்குளம் ஆகிய ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மக்களுக்கு நேரடியாக பணப்பட்டுவாடா செய்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் அஞ்சல குழுவினா் இதுவரை சுமாா் 873 பேருக்கு மொத்தம் ரூ. 22,15,400 பணப்பட்டுவாடா செய்துள்ளனா்.

இந்த சேவையின் மூலம் வங்கிப் பணத்தை எடுக்க விரும்புவோா் 99628 87517, 99944 88568 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.