வெடிகுண்டு பிரிவு உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு மாற்றம்
புதுச்சேரி போலீஸ் வெடிகுண்டு பிரிவு கழிப்பறையில் மதுப்புட்டி கிடந்ததால், அங்கு பணியாற்றிய உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதுச்சேரி பாரதி பூங்கா, பெருமாள் கோயில் எதிரே காவல் துறையின் வெடிகுண்டு சோதனைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, உதவி ஆய்வாளரான பங்கஜ் ஆசம் தலைமையில், 16 காவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.
சில நாள்களுக்கு முன்பு குற்றப் பிரிவு முதுநிலை எஸ்.பி. அகன்ஷா யாதவ் வெடிகுண்டு சோதனைப் பிரிவுக்கு திடீரென ஆய்வுக்குச் சென்றாா். அப்போது, பட்டப்பகலில் அங்குள்ள கழிப்பறையில் மதுப்புட்டி கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து, பணியிலிருந்த காவலா் மது அருந்தியிருக்கலாம் என்று கருதிய முதுநிலை எஸ்.பி., இதைத் தடுக்கத் தவறிய உதவி ஆய்வாளா் பங்கஜ் ஆசமை ஆயுதப் படைக்கு மாற்றி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
